மண்டல கூடைப்பந்து; ஜே.பி.ஆர்., அணி வெற்றி
கோவை; அண்ணா பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில், சென்னை ஜே.பி.ஆர்., கல்லுாரி அணி அபார வெற்றி பெற்றது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு இடையே மாணவியருக்கான கூடைப்பந்து போட்டிகள், இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தன.11 அணிகள் பங்கேற்ற நிலையில் முதல் அரையிறுதியில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., அணியும், சென்னை புனித ஜோசப் கல்லுாரி அணியும் மோதின.துவக்கம் முதலே, இரு அணி வீராங்கனைகளும் துடிப்புடன் விளையாடினர். பி.எஸ்.என்.ஏ., அணியினர் வெற்றிக்காக போராடிய நிலையில், ஆட்ட முடிவில், புனித ஜோசப் அணியினர், ஒரு புள்ளி வித்தியாசத்தில்(54-53) வெற்றி பெற்றனர்.இரண்டாம் அரையிறுதியில், சென்னை ஜே.பி.ஆர்., அணி, 50-37 என்ற புள்ளி கணக்கில் கே.பி.ஆர்., அணியை வென்றது.இறுதிப்போட்டியில், ஜே.பி.ஆர்., அணியினர், 58-31 என்ற புள்ளி கணக்கில் புனித ஜோசப் கல்லுாரி அணியை வீழ்த்தி, வெற்றிவாகை சூடினர்.மூன்றும் மற்றும் நான்காம் இடத்துக்கான ஆட்டத்தில், பி.எஸ்.என்.ஏ., அணியினர், 48-29 என்ற புள்ளி கணக்கில், கே.பி.ஆர்., அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி, அண்ணா பல்கலை விளையாட்டு வாரிய தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாலகுமரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.