வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மேற்கூரை ஒழுகினால் பயணிகள் கட்டணம் திருப்பி தரப்படுமா?
கோவை; மழைக்காலம் துவங்க உள்ளதால், பஸ்களின் மேற்கூரையை சரிசெய்யும் பணிகளில், போக்குவரத்து துறையினர் ஈடுபட்டுள்ளனர்.விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. மழை காலங்களில் ஒருசில அரசு பஸ்களின் மேற்கூரைகள் வழியாக மழைநீர் ஒழுகி, பயணிகள் நனைவது வாடிக்கையாகி வருகிறது. இதைத்தடுக்க, கோவை கோட்ட அரசு போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும் பஸ்களில், மழைநீர் புகாமல் இருக்க, மேற்கூரைகளை சோதித்து சேதம் ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மண்டல பொதுமேலாளர் துரைசாமி கூறுகையில், ''பஸ்களின் மேற்கூரையை சரிசெய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. தினமும், பஸ்களின் மேற்கூரையை சோதித்து அதில் சேதம் இருந்தால், உடனடியாக சரிசெய்யப்படுகிறது. பருவமழை நெருங்குவதால், கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் கூட்டம் நடத்தி, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.
மேற்கூரை ஒழுகினால் பயணிகள் கட்டணம் திருப்பி தரப்படுமா?