மேலும் செய்திகள்
விழுப்புரத்துக்கு நிவாரணம் நகராட்சி உதவிக்கரம்
03-Dec-2024
சூலுார் : புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, சுல்தான்பேட்டையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.தமிழகத்தின் கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டு, ஏராளமான மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில், நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டன.அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, ரவை, சாம்பார் துாள், உப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் திரட்டி, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.சுல்தான்பேட்டை வட்டார கமிஷனர் சிக்கந்தர் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
03-Dec-2024