உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு சீரமைக்க தயக்கம் வாகன ஓட்டுநர்கள் அவதி

ரோடு சீரமைக்க தயக்கம் வாகன ஓட்டுநர்கள் அவதி

வால்பாறை; வால்பாறை - சோலையாறு செல்லும் ரோட்டை சிரமைக்க தயக்கம் காட்டுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.வால்பாறை நகரில் இருந்து, நல்லகாத்து வழியாக சோலையாறு செல்லும், 3 கி.மீ., துாரம் உள்ள ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த ரோட்டில் கோவில்கள், நல்லமுடி காட்சி முனை, சோலையாறுடேம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ரோட்டை சீரமைக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'தனியார் எஸ்டேட்க்கு சொந்தமான, 3 கி.மீ., துாரம் உள்ள ரோட்டை, நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். ரோடு கரடு, முரடாக உள்ளதால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி சார்பில் சோலையாறு எஸ்டேட் ரோட்டை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''சோலையாறு எஸ்டேட் ரோட்டை சீரமைக்க, அந்த எஸ்டேட் நிர்வாகம் நகராட்சிக்கு தடையின்மை சான்று வழங்கியுள்ளது. சோலையாறு, கல்லாறு ரோடு சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன.இதே போல், வில்லோனி மருத்துவமனை செல்லும் ரோடும் விரைவில் சீரமைக்கப்படும். மாவட்ட கலெக்டர் ஒப்புதல் வந்த பின், மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரோடு சீரமைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி