மேலும் செய்திகள்
சாலையோர புதர்கள் அகற்றம்
20-Jun-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர ரோடுகளில், மையத்தடுப்பு பகுதியில் தேங்கிய மண், நவீன இயந்திரம் வாயிலாக அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி நியூஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த ரோடுகளில் மையத்தடுப்பையொட்டி, மண் அதிகளவு தேங்கியுள்ளது.இவை காற்றில் பறப்பதால் வாகன ஓட்டுநர்களின் கண்களில் படுவதால் கவனச்சிதைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், ரோட்டில் மண் தேங்குவதால் வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விழுகின்றனர். இந்த மண்ணை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உடுமலை நகராட்சியில் உள்ள நவீன இயந்திரம், பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்பட்டு, ரோடுகளை துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.இப்பணிகளை பார்வையிட்ட நகராட்சி கமிஷனர் கணேசன், 'ரோட்டில் தேங்கும் மண்ணை அகற்ற, உடுமலை நகராட்சியிடம் இருந்து நவீன இயந்திரம் பெறப்பட்டது. நகரத்துக்கு உட்பட்ட சாலைகளில் தேங்கியுள்ள மண் அகற்றப்படும்,' என்றனர்.
20-Jun-2025