சார் பதிவாளர் அலுவலக கட்டடம் சீரமைப்பு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கழிவறைகள், கட்டடத்தின் மேற்கூரைகள் சீரமைக்கப்பட்டன.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த கட்டடம் பழைய கட்டடம் என்பதால், மழைக்காலங்களில் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள்ளே நீர் கசியும். மேலும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான கழிப்பறை சீரமைக்கப்படாமல், புதர் மண்டி உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் பத்திர பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதனிடைய சார் பதிவாளர் ராமமூர்த்தி, தனது சொந்த செலவில் கட்டடத்தின் மேல் பகுதியில் டைல்ஸ் ஒட்டி, நீர் கசியாமலும், கழிப்பறையையும் சீரமைத்து பொதுமக்கள் உபயோகப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். அதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.----