உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்னாறு பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

சின்னாறு பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

தொண்டாமுத்தூர்; தினமலர் செய்தி எதிரொலியாக, சாடிவயல், சின்னாற்று பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.சாடிவயலில், கோவை குற்றாலம் வனத்துறையினரின் சோதனை சாவடிக்கு செல்லும் முன்பு உள்ள சின்னாற்றின் மீது, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்தே, வனத்துறையினரின் சோதனைச் சாவடி, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் அப்பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு செல்ல முடியும்.இந்நிலையில், கடந்த வாரம், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, சின்னாற்று பாலத்தில் ஏற்பட்டிருந்த சேதம், மேலும் பெரிதாகி குழி ஏற்பட்டது. இதனால், வழியாக நடந்து செல்வோர்கள் மற்றும் வாகனத்தில் வருபவர்களும், இக்குழிக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகும் ஆபத்து உள்ளது.இதுகுறித்து கடந்த 30ம் தேதி, நமது நாளிதழில் படத்துடன் செய்து வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சின்னற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்கும் பணி, நேற்று துவங்கப்பட்டது. ஒரிரு நாட்களில் பணிகள் முடிவடையும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ