உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறை கண்காணிப்பு பணிக்கு மதிப்பூதியம்; முழுமையாக விடுவிக்க கோரிக்கை

அறை கண்காணிப்பு பணிக்கு மதிப்பூதியம்; முழுமையாக விடுவிக்க கோரிக்கை

பொள்ளாச்சி; பொதுத்தேர்வின்போது, அறை கண்காணிப்பாளர் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை முழுமையாக விடுவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையர் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகளில், பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளராக பணியாற்ற, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அவ்வகையில், அறை கண்காணிப்பாளராக பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, தினமும், மதிப்பூதியமாக, 80 ரூபாய் வழங்கப்படுகிறது. தவிர, 7 கி.மீ., தொலைவுக்கு அப்பால் இருந்து தேர்வு மையம் செல்லும் ஆசிரியர்களுக்கு, 106 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த தொகை, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிற்கு விடுவிக்கப்படும். அவர்கள், தேர்வு முடியும் இறுதி நாளில், அந்தந்த ஆசிரியர்களிடம் மதிப்பூதியத்தை வழங்குவர்.ஆனால், சமீபத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிந்த நிலையில், 50 சதவீதம் மட்டுமே மதிப்பூதியம் விடுவிக்கப்பட்டுள்ளது. முழு மதிப்பூதியத்தையும் வழங்க வேண்டுமனெ, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம், 50 சதவீதம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, ஏப்., அல்லது மே மாதம் விடுவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், தலைமையாசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவிட்டு, ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கின்றனர். இனி வரும் நாட்களில், பள்ளிக் கல்வித்துறை முழுமையாக மதிப்பூதியத்தை விடுவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ