உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதிமீறல் கட்டட ஆவணங்கள் சர்ப்பிக்க  கால அவகாசம் கேட்பு

விதிமீறல் கட்டட ஆவணங்கள் சர்ப்பிக்க  கால அவகாசம் கேட்பு

வால்பாறை: வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விதிமீறல் கட்டடங்கள் அதிக அளவில் உள்ளன.  மலைப்பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள பல மாடி கட்டடங்கள் குறித்தும், அவற்றிற்கு முறையாக அனுமதி உள்ளதா என்பது குறித்தும், கோர்ட் உத்தரவு படி பொள்ளாச்சி சப்–கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, கமிஷனர் நித்யா மற்றும் அதிகாரிகள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். அப்போது, வால்பாறை நகரில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு உரிய அனுமதி சான்றுகளை நகராட்சி அலுவலகத்தில் ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என, நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், குறுகிய காலத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பது இயலாது காரியம். எனவே கலெக்டர் உத்தரவு படி சமர்ப்பிக்க, 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி