உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நலவாழ்வு மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

நலவாழ்வு மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

வால்பாறை:வால்பாறை, வாழைத்தோட்டம் நகர்புற நலவாழ்வு மையத்தின் முன்பக்கம் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, நகராட்சி சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்தாண்டு, நகர்புறநலவாழ்வு மையம் கட்டப்பட்டது. இந்தகட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மையம் துவங்கப்பட்டதையடுத்து பொதுமக்களுக்கு காய்ச்சல், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நலவாழ்வு மையத்தின் முன்பக்கம் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'மக்கள் வசதிக்காக துவங்கப்பட்ட சுகாதார மையத்தின் முன்பாக, விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நலவாழ்வு மையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி, அந்த இடத்தில் நகராட்சி சார்பில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை