உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதர் சூழ்ந்த மயானம் சுத்தப்படுத்த கோரிக்கை

புதர் சூழ்ந்த மயானம் சுத்தப்படுத்த கோரிக்கை

நெகமம்; நெகமம், வஞ்சிபாளையத்தில் இருந்து பெரியகளந்தை செல்லும் வழித்தடத்தில் உள்ள மயானம் புதர் சூழ்ந்து காணப்படுகிறது.நெகமம், வஞ்சிபாளையத்தில் இருந்து பெரியகளந்தை செல்லும் வழித்தடத்தில் மயானம் உள்ளது. இந்த மயானம் முழுவதும் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், உடல் அடக்கம் செய்தல் மற்றும் இறுதி காரியங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், இறுதி சடங்குக்கு வரும் மக்கள் பலர் நிற்க முடியாமல் ரோட்டில் நிற்கும் நிலை நிலவுகிறது. மேலும், அதிகளவு புதர் இருப்பதால் விஷப்பூச்சிகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில், மயானத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்திகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை