வரி செலுத்த வேண்டுகோள்
மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் மதுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:- காரமடை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகைகள் உள்ளிட்ட வரியினங்களை நிலுவை இன்றி சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.--