உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாழடைந்த அங்கன்வாடி கட்டடம் மாற்று இடத்துக்கு மாற்ற கோரிக்கை

பாழடைந்த அங்கன்வாடி கட்டடம் மாற்று இடத்துக்கு மாற்ற கோரிக்கை

பொள்ளாச்சி, ; 'பொள்ளாச்சி அமைதி நகர் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்,' என, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அதிகாரிகளிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36வது வார்டில் அமைதிநகர் உள்ளது. இங்குள்ள அங்கன்வாடி மையம் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், அதை சீரமைக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நகராட்சி கமிஷனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சி, 36வது வார்டில், ஏற்கனவே சமுதாய கூடமாக இயங்கி வந்த பழைய கட்டடத்தில், தற்போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் இயங்குகிறது.இம்மையம் வாயிலாக, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். பல ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட மைய கட்டடம், பராமரிப்பின்றி உள்ளது.மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகின்றன. சுற்றுச்சுவர் முழுவதும் விரிசல் விட்டு ஆபத்தான நிலையில் கட்டடம் உள்ளது.குழந்தைகள் படிக்க கூடிய மையத்தை பராமரிக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன், குழந்தைகள் நலன் கருதி மாற்று கட்டடத்துக்கு, அங்கன்வாடி மையத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை