உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆபத்தான மரத்தை அகற்ற கோரிக்கை

 ஆபத்தான மரத்தை அகற்ற கோரிக்கை

வால்பாறை: வால்பாறையில், குடியிருப்பு பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை காமராஜ்நகர், கக்கன்காலனி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. வீடுகள் அதிகமுள்ள பகுதியில் மரங்கள் அமைந்துள்ளதால், எந்த நேரத்திலும் மரம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. மழை காலங்களில் வீட்டின் மீது மரம் விழும் அபாயமும் உள்ளது. இதனால், வால்பாறை நகர் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மரங்கள் அதிகளவில் உள்ளன. மக்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ