உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதமடைந்த ரோடு சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த ரோடு சீரமைக்க கோரிக்கை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு - வடசித்தூர் ரோடு சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்துார் பகுதியில் ஊராட்சி அலுவலகம் செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. பருவமழை பெய்வதால், தற்போது இந்த ரோட்டில் மழை நீர் தேக்கமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் பள்ளம் எங்கு உள்ளது என்பதை அறியாமல், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். அடுத்த வாரம் நடக்கும் மயிலந்தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சேதமடைந்த ரோட்டின் அருகே விளையாட்டு திடல்கள், கடைகள் அமைக்கப்படுகிறது. மயிலந்தீபாவளிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள். எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த ரோட்டில் மண் கொண்டி, மழை நீர் தேங்காத படியும், வாகனங்கள் எளிதாக சென்று வரும்படியும் தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ