கிளை நுாலகமாக தரம் உயர்த்த கோரிக்கை
அன்னுார்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊர்ப்புற நுாலக வாசகர்கள் மனு அளித்தனர். நல்லிசெட்டிபாளையம் ஊர்ப்புற நுாலக வாசகர்கள், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காரை கவுண்டன் பாளையம் ஊராட்சி சார்பில், அறிவிப்பு பலகை, ஊர்ப்புற நுாலகத்திற்கு சொந்தமான இடத்தில், நுாலக கட்டிடத்தை மறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஊர்ப்புற நுாலகத்தின் முன் பகுதியை மறைக்கும் வகையில் ஊராட்சி அறிவிப்பு பலகை வைத்தது வாசகர்களை வேதனை அடையச் செய்கிறது. உடனடியாக அறிவிப்பு பலகையை அகற்ற வேண்டும். ஊர்ப்புற நுாலகத்தை, கிளை நுாலகமாக தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.