மேலும் செய்திகள்
தீபாவளி போனஸ் வழங்க பணியாளர்கள் கோரிக்கை
04-Oct-2024
வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முன் கூட்டியேபோனஸ் வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி., கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை தாலுகா ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் மோகன், ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில், வன விலங்குகளுக்கு மத்தியிலும், அட்டைப்பூச்சியின் கடியிலும், பணிபுரியும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை காட்டி தொழிலாளர்களுக்கு குறைவான போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும். அத்துடன் கருணைத்தொகையாக தொழிலாளிக்கு, ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு, 15 நாட்களுக்கு முன்னதாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
04-Oct-2024