வீட்டுக்கு செல்ல விடாமல் தடுக்குது கழிவு நீர் நத்தை வேக கால்வாய் கட்டும் பணியால் குடியிருப்போர் அவதி
கிடப்பில் சாக்கடை பணி சூலுார், பள்ளபாளையம், 15வது வார்டில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக 20 நாட்களுக்கு முன் சாலை தோண்டப்பட்டது. பணிகள் நத்தை வேகத்தில் நடக்கின்றன. சாலையை தோண்டியுள்ளதால், வீடுகளுக்கு போக முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புவாசிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். - துரை, சூலுார்.பேருந்துகளை அதிகரிக்கணும் சேரன் மாநகருக்கு குறைந்த எண்ணிக்கையில், அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மினி மற்றும் தனியார் பஸ்களும் வருவதில்லை. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆட்டோ, கால்டாக்ஸியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. இவ்வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். - காந்திமதி, சேரன் மாநகர்.பாழாகும் வாலாங்குளம் வாலாங்குளம் கரையில் சிலர், தொடர்ந்து குப்பை மற்றும் உணவுக்கழிவு கொட்டிச் செல்கின்றனர். கரைகளில் கழிவு ஒதுங்கி, சாக்கடை போல் காட்சியளிக்கிறது. குளத்து நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. - பாலன், போத்தனுார்.மதுக்கடையை மாற்றுங்கள் பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி., காலனி, எல்.ஜி. கம்பெனி அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. மாலை வேளையில் சிலர் மதுவை வாங்கி சாலையோரம், அருகில் உள்ள மரத்தடியில் நின்றபடியே அருந்துகின்றனர். வாகனங்களை தாறுமாறாக சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. - வேணுகோபால், எல்.ஐ.சி., காலனி.நோய்த்தொற்று அபாயம் போத்தனுார், 95வது வார்டு, கடை வீதி, ரயில் நிலையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. துர்நாற்றத்துடன் செல்லும் நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. - பாபு, போத்தனுார்.அதிகரிக்கும் விபத்துகள் காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சாலையில், பயணிகளை ஏற்றுவதற்காக பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. சி.கே.காலனியில் இருந்து வரும் வாகனங்கள், சாலையை கடக்க சிரமமாக உள்ளது. விபத்துகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. - முருகேசன், காந்திபுரம்.சாலையை கடக்க சிரமம் விளாங்குறிச்சி ரோடு, வி.ஐ.பி., நகரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் சாலையை கடக்கவே, பல மணி நேரமாகிறது. சாலை நடுவே தடுப்பு வைக்க வேண்டும். -தங்கவேல், விளாங்குறிச்சி.துரத்தும் நாய்கள் சுகுணா பிப்ஸ் பள்ளி அருகே, நேரு நகர் மேற்கில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோரை கடிக்க துரத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். - வித்யா, நேரு நகர்.மோசமான சாலையால் விபத்து சிங்காநல்லுார் சிக்னல் முதல் ஒண்டிப்புதுார் வரை, ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. - ராஜேந்திரன், சிங்காநல்லுார்.சாலையில் ஓடும் கழிவுநீர் வெள்ளக்கிணறு அம்மாசை கவுண்டர் வீதியில் உள்ள, அபார்மென்ட் சோக்பீட் நிரம்பி, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. வாகனங்கள் செல்லும்போது, நடந்துசெல்வோர் மீது தெறிக்கிறது. - ராகேஷ், வெள்ளக்கிணறு.