உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

கோவை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவை மருதமலை கோவிலுக்கு வரும் 9 ம் தேதி டூவிலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாகத்தினை முன்னிட்டு மலைக்கோவிலுக்கு டூவிலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படி வழியாகவும், திருக்கோவிலின் பஸ் மற்றும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்களில் சென்று தரிசனம் செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

NATARAJAN R
ஜூன் 06, 2025 21:53

பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் திமுக அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் என ஒரு கூட்டம் வந்தால் அனுமதி உண்டு. அது மட்டுமல்ல. அமைச்சர் என்றால் அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் செல்லும் வாகனங்கள் மலை ஏறி சென்று பொறுமையுடன் தரிசனம் செய்து விட்டு கீழே வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது. இது நடக்கப்போவது மட்டும் அல்ல. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் திரு செந்தில் பாலாஜி கூட்டமாக வந்த போது நடந்தது. பக்தர்கள் கொதித்து எழுந்தனர்.


புதிய வீடியோ