வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓட்டுப்பெட்டி வீட்டுக்கு வரும் இதுபோன்ற விஷயங்களுக்கு அரசு அதிகாரிகள் ஐம்புலன்களும் மரத்துப் போய்விடும். மாவட்ட கலெக்ட்டர் உதவ முடியும்
மேலும் செய்திகள்
கலை திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
11-Feb-2025
கோவை; கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் நம்பர் 4 வீரபாண்டி நாயக்கனுார் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா,73. வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வரலாற்று ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கணவர் இறந்து விட்டார். ஒரே மகளும் உடல் நலமின்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிர்மலாவுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதற்கு, ஒவ்வொரு ஆண்டும் கருவூலகத்தில், வாழ்நாள் சான்று சமர்ப்பித்து நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.ஆசிரியை நிர்மலா,உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காததால், ஓராண்டாக ஓய்வூதியம் பெற முடியவில்லை. அவரை, 10ம் தேதி கலெக்டர் அலுவலக கருவூலக பிரிவுக்கு நேரில் வர அறிவுறுத்தியுள்ளனர்.சிகிச்சையில் இருந்ததால், அன்று செல்ல முடியவில்லை. நேற்று (11ம் தேதி) 'கால் டாக்ஸி' பிடித்து கலெக்டர் அலுவலகம்சென்றார். தைப்பூச விடுமுறையால், கருவூலகம் செயல்படவில்லை. மூதாட்டி கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.'மகளுக்கும் உடல் நலமில்லை; எனக்கும் உடல் நலமில்லை; ஓய்வூதியம் கிடைக்கவில்லை. பணத்துக்கு என்ன செய்வேன்' என, கண் கலங்கி பேசினார்.அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து, நாளை (இன்று)வாருங்கள்; ஓய்வூதியம் கண்டிப்பாக கிடைக்கும் என கூறி, அனுப்பி வைத்தனர்.
ஓய்வூதியர்கள், ஜீவன்பிரமான் இணைய தளம் www.jeevanpraman.gov.inவாயிலாக, அஞ்சல் துறை, வங்கி, இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலகம், சார் கருவூலகங்கள் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து, ஆண்டு நேர்காணலில் பங்கேற்கலாம். நோய் பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சையில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தால், அவர்களது வீட்டுக்கே கருவூலக ஊழியர்கள் சென்று உறுதிப்படுத்துகின்றனர்.
ஓட்டுப்பெட்டி வீட்டுக்கு வரும் இதுபோன்ற விஷயங்களுக்கு அரசு அதிகாரிகள் ஐம்புலன்களும் மரத்துப் போய்விடும். மாவட்ட கலெக்ட்டர் உதவ முடியும்
11-Feb-2025