அரிசி, சிறுதானிய ஏற்றுமதி; பல்கலையில் 2 நாள் பயிற்சி
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், அரிசி மற்றும் சிறுதானிய பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறித்து, இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.வரும் பிப். 5, 6ம் தேதிகளில் நடக்கும் இப்பயிற்சியில், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதி ஆண்டு பயிலும் பட்டதாரி மாணவர்கள், பிற பட்டதாரிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் பங்குபெறலாம்.மேலும் விவரங்களுக்கு 99949 89417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.