உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர் மின்கோபுர விளக்கு ஒளிராததால் விபத்து ஏற்படும் அபாயம்

உயர் மின்கோபுர விளக்கு ஒளிராததால் விபத்து ஏற்படும் அபாயம்

கோபுர விளக்கு பழுது

பொள்ளாச்சி, நியூ ஸ்கீம் ரோடு கார்னர் பகுதியில் உள்ள உயிர் கோபுர மின்விளக்கு, கடந்த ஒரு வாரமாக ஒளிராமல் அப்பகுதி முழுவதும் இருளாக காணப்படுகிறது. இதனால், இங்கு வாகன விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதை கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.-- செந்தில், பொள்ளாச்சி.

குப்பையை அகற்றணும்!

கிணத்துக்கடவு, மேம்பாலம் கீழ் பகுதியில் சென்டர் மீடியனில் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை தேசிய நெடுஞ்சாலைத் துறை கவனித்து, குப்பையை அகற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விக்னேஷ், கிணத்துக்கடவு.

நடைபாதையில் இடையூறு

வால்பாறை, புது மார்க்கெட் மற்றும் அம்மா உணவகத்திற்கு செல்லும் நடைபாதையில், தனியார் கட்டடப் பணிக்கான இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதால், அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தமிழ்செல்வன், வால்பாறை.

நீரோடை தடுப்பு சேதம்

பொள்ளாச்சி, பத்ரகாளியம்மன் கோவில், கந்தசாமி பூங்கா செல்லும் ரோட்டில் உள்ள நீரோடை தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் இவ்வழியில் செல்லும் போது, சிரமத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.-- டேவிட், பொள்ளாச்சி.

பிளக்ஸ் கலாசாரம்

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் ஆங்காங்கே உள்ள மின்கம்பங்கள், மரங்களில் மீண்டும் சிறிய அளவிலான விளம்பர பிளக்ஸ் காணப்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும். விளம்பரம் வைத்துள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரபு, பொள்ளாச்சி.

குப்பையை அகற்றணும்

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே குப்பை கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இதை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - முருகன், உடுமலை.

ரோடு சரியில்லை

உடுமலை திருமூர்த்திநகரில் இருந்து சாம்பல் மேடு வரை ரோடு, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.- ஆனந்தகுமார், உடுமலை.

சுகாதார சீர்கேடு

உடுமலை தளி ரோடு மேம்பாலத்தின் கீழே, சுரங்க பாலத்தை ஓட்டி, குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.- ராஜேந்திரன், உடுமலை.

கொசு உற்பத்தியால் கவலை

உடுமலை பள்ளபாளையம் நால்ரோடு சந்திப்பு அருகே, ரோட்டோரத்தில் மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியாகிறது; அருகிலுள்ள குடியிருப்பில் நோய் பரவும் அபாயம் உள்ளது.-ராதாகிருஷ்ணன், உடுமலை.

விபத்து அபாயம்

உடுமலை ஏரிப்பாளையம் ரோடு சந்திப்பில், தானியங்கி சிக்னல் செயல்படுவதில்லை. தாறுமாறாக ரோட்டை கடக்கும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- மணிவண்ணன், உடுமலை.

சாய்ந்த மின்கம்பம்

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் காணப்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இதை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி