மேலும் செய்திகள்
தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
08-Nov-2024
வால்பாறை; வால்பாறை, கக்கன் காலனி ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர் கட்ட வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகர் பகுதியில், கக்கன் காலனி அமைந்துள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் தங்கும் விடுதி, நகராட்சி விளையாட்டு மைதானம், கோவில்கள் உள்ளன.இந்நிலையில், புதுமார்க்கெட் வழியாக கக்கன் காலனி செல்லும் ரோடு, சரிவாக இருப்பதால் வேகமாக வரும் வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க ரோட்டோரத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.பொதுமக்கள் கூறியதாவது: கக்கன் காலனி ரோட்டில், நாள் தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. புதுமார்க்கெட் வழியாக கக்கன் காலனி செல்லும் ரோட்டில் வலது புறம் தடுப்புச்சுவர் இல்லாததால் அதிவேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு, விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது.மேலும், நடந்து செல்லும் மக்களுக்கும் போதிய பாதுகாப்பில்லை. வேகமாக வரும் வாகனங்கள் நடந்து செல்பவர்கள் மீது மோதுகின்றன. பாதசாரிகளும் தடுப்புச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் தடுமாறுகின்றனர். எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், நகராட்சி சார்பில் அந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
08-Nov-2024