வாசகர்கள் கருத்துகள் ( 1 )
289 மரணங்களை எப்படி தடுப்பது. இதெல்லாம் பெருமையை
கோவை: கோவை மாநகரில்'யூ டேர்ன்' முறையால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை மாநகர பகுதியில், 2023ம் ஆண்டு ஏப்., மாதம் 'யூ டேர்ன்' முறை கொண்டு வரப்பட்டது. முதல் முதலாக அவிநாசி சாலையில், பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி அருகில், 'யூ டேர்ன்' அமைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வசதியாக இருந்ததால், இந்த திட்டம் நகரின் பல பகுதிகளில் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தற்போது, 29 சிக்னல்கள் அகற்றப்பட்டு, 'யூ டேர்ன்' அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில், 'யூ டேர்ன்' திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் பொது மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் முன்பை விட, விரைவாக செல்ல முடிகிறது. சிக்னல்களில் நின்று நின்று போக வேண்டிய நிலை இல்லாததால், வாகன 'மைலேஜ்' அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 'யூ டேர்ன்' திட்டத்தால், கோவை மாநகரில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய விபத்துகள் 4 சதவீதம் குறைந்துள்ளதாக, சமீபத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.'யூ டேர்ன்' திட்டத்திற்கு முன், 2022ம் ஆண்டு 316 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 'யூ டேர்ன்' அமைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக குறைந்துள்ளது.2022ம் ஆண்டை விட தற்போது, நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும், விபத்து மரணங்கள் குறைந்திருப்பது, யூ டேர்ன் திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாக பார்க்கப்படுகிறது.
289 மரணங்களை எப்படி தடுப்பது. இதெல்லாம் பெருமையை