மேலும் செய்திகள்
பெண்கள் காலி குடங்களுடன் ஊட்டியில் சாலை மறியல்
02-Apr-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அமைந்துள்ளது.இப்பகுதிக்கு கடந்த, 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை. அதனால் பெண்கள் காலி குடங்களுடன், காபி ஒர்க்ஸ் ஷாப் முன்பு, அன்னூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.இதுகுறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலர் பிரபுவிடம் கேட்டபோது, 'மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் மரங்கள் வெட்டும் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 10 நாட்களாக குடிநீர் பம்பிங் செய்யவில்லை. தற்போது உப்பு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
02-Apr-2025