உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை சந்திப்பு பணி இயக்குனர் ஆய்வு 

சாலை சந்திப்பு பணி இயக்குனர் ஆய்வு 

பொள்ளாச்சி,;பொள்ளாச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு பணிகளின் கீழ், பல்லடம் - கொச்சின் மாநில எல்லை ரோட்டில், பாப்பம்பட்டி பிரிவில் நான்கு சாலைகள் சந்திப்பு மேம்பாட்டு பணி, 2.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கிறது.இப்பணியை, சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். இருவழிச்சாலைகளை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியில் மேலடுக்கு ஜல்லிக்கற்கள் பரப்புதல் பணியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பணியை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சித்ரா, உதவி கோட்ட பொறியாளர்கள், உதவியாளர்கள், சாலை பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ