மேலும் செய்திகள்
ரோட்டோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் தொல்லை
21-May-2025
பொள்ளாச்சி,; முறையான அறிவிப்பு பலகை வைத்த பின்னரே, சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.இதுதவிர, நகர சாலைகளிலும் அவ்வப்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது ஒரு புறமிருக்க, ரோட்டின் நடுவே, பாதாளச்சாக்கடையின் ஆளிறங்கு குழாயில் அடைப்பை நீக்குதல், கசிவான மற்றும் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்தல் உள்ளட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறு, சாலையில் எந்தவொரு பணிகள் மேற்கொண்டாலும், 'ஆட்கள் பணிபுரியும் இடம்'; சீரமைப்பு பணி நடப்பதால் மெதுவாக செல்லவும்,' போன்ற முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவதில்லை. இதனால், அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், விபத்தை ஏற்படுத்தும் சூழலை சந்திக்கின்றனர்.எனவே, சாலையில் மேற்கொள்ளப்படும எந்தவொரு பணியாக இருந்தாலும், அங்கு வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தும் வகையில், விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
21-May-2025