உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு சீரமைப்பு பணிகள் துவக்கம்

ரோடு சீரமைப்பு பணிகள் துவக்கம்

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்து, ஏலூர் பிரிவு செல்லும் ரோட்டில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இந்த ரோட்டில், ஆங்காங்கே சேதமடைந்திருந்ததால் மக்கள் பலர் இவ்வழியில் செல்வதை தவிர்த்து, பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக, 'ஒன் வே' திசையில் விபத்து அபாயத்தை பொருட்படுத்தாமல், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வந்தனர். தற்போது, சொலவம்பாளையம் ரோட்டை, 600 மீட்டர் தூரத்திற்கு சீரமைக்க, மாநில நிதிக்குழு மானியத் திட்டம் வாயிலாக, 40.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !