சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு; மாணவர்களுக்கு அறிவுரை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி மாணவ, மாணவியருக்கு வாகனம் ஓட்டும் முறை, ஓட்டுநர் உரிமம் பெறும் முறை, சாலை விதிகள் போன்றவை காணொளி வாயிலாக காண்பித்து விளக்கம் தரப்பட்டது. பள்ளி முதல்வர் பிரகாஷ் வரவேற்றார். பள்ளி தாளாளர் மாரிமுத்து பேசினார். வட்டார போக்குவரத்து அலுவலர் கோகுலகிருஷ்ணன், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன், போக்குவரத்து விதிகளை மதிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.