அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அதை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில், உயிர் அமைப்பின் துணைத் தலைவர் சதீஷ்குமார் பங்கேற்று, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த தகவல்களை எடுத்துரைத்தார். இதில், பங்கேற்ற மாணவர்களுக்கு, 'பேட்ச்' வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர் ஆனந்த் செய்திருந்தார்.