உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போத்தனூர்: செட்டிபாளையம் செல்லும் வழியிலுள்ள பிருந்தாவன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி முதல்வர் யோகாம்பாள் தலைமையில் நடந்தது. இதில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த பாடல்களை பாடியும், நடித்தும் விளக்கினர். தொடர்ந்து செட்டிபாளையம் சாலையிலிருந்து பள்ளி வரை, சாலை விதிகளை கடைபிடிப்போம், வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் பயன்படுத்தாதீர், ஹெல்மெட் அணியவும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன், ஊர்வலமாக சென்றனர். முன்னதாக அவ்வழியே ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனங்களில் வந்த, நூறு பேருக்கு மாணவர்கள் ஹெல்மெட் வழங்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை