உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு அகலப்படுத்தும் பணிகள் தீவிரம் 

ரோடு அகலப்படுத்தும் பணிகள் தீவிரம் 

ஆனைமலை : ஆனைமலை அருகே, ரோடு அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆனைமலை - பூலாங்கிணறு செல்லும் ரோட்டில், போக்குவரத்துக்கு வசதியாக ரோடு அகலப்படுத்த சிறு பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து, துறையூர் மேடு சந்திப்பு பகுதியை மேம்படுத்தும் பணி, இரண்டு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.இப்பணிக்கு இடையூறாக உள்ள, 17 மரங்களை அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் வேறு இடத்தில் மறு நடவு செய்தனர். இதையடுத்து அகலப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆனைமலை - பூலாங்கிணறு ரோட்டில் சந்திப்பு பகுதி மேம்பாடு பணிகள், 21 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அங்கிருந்த மரங்கள் மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது. அதன்பின், ரோடு அகலப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ