அரசூர் அரசு பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகம்
சூலூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழகம் முழுக்க, 15 பள்ளிகளில் எந்திரவியல் ஆய்வகம் ( ரோபோட்டிக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை, செயல்முறை கற்றல் மூலம் ஆர்வத்தை கொண்டு வந்து, திறன்களை மேம்படுத்தி கொள்ளவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறனை வலுப்படுத்தி கொள்ளவும், குழுவாக செயல்பட்டு படைப்பாற்றலை வளர்க்கவும், இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க அமைக்கப்பட்டுள்ள, இந்த ஆய்வகங்கள் திறக்கப்பட்டு, இன்று முதல் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.