மேலும் செய்திகள்
லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
29-Jul-2025
கோவை; ரோட்டரி மாவட்ட இன்டராக்ட் கூட்டம், நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அவிலா கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த இன்டராக்ட் உறுப்பினர் நிகிதா, புதிய ரோட்டரி மாவட்டம் 3206 தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆலோசகர் கார்த்தி திருமூர்த்தியால் தொகுக்கப்பட்ட இன்டராக்ட் கையேட்டை, மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்திரன் வெளியிட்டார். கோவை, பாலக்காடு, திருச்சூர், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் பகுதிகளைச் சேர்ந்த, 70க்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து, இன்டராக்ட் குழுக்கள் பங்கேற்றன. ரோட்டரி மாவட்ட 3206 ஆளுநர் ராகவேந்திரன், வருங்கால மாவட்ட ஆளுநர் மாருதி, இளைஞர் சேவை மாவட்டத் தலைவர் சுவாமிநாதன், முன்னாள் தலைவர் காட்வின் மரியா விசுவாசம், நேஷனல் மாடல் பள்ளி முதல்வர் பேபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
29-Jul-2025