ரூ.100 கோடி மோசடி வழக்கு; 4 பேர் ஜாமினில் விடுவிப்பு
கோவை; 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான நான்கு பேர், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில், அலுவலகம் நடத்தி இரட்டிப்பு பண மோசடி நடப்பதாக, புகார் வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், 100 கோடி ரூபாய் வரை, மோசடி நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு,48, அவரது கூட்டாளிகள் ஜெயப்பிரதா,47, பாஸ்கர்,49, சையது முகமது,44, ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.கைதான நான்கு பேரும், ஜாமினில் விடுவிக்க கோரி,கோவை டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இவர்களில், பாஸ்கர் தவிர மற்ற மூவருக்கும், கடந்த 5ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. பாஸ்கர் மனு மீது, நேற்று விசாரணை நடத்தி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.