சோதனையில் ரூ.1.5 லட்சம் சிக்கியது
சூலூர்: சுல்தான்பேட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகில், வேளாண் அலுவலர் சுகன்யா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி, 1.50 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. ஆட்டோவை ஓட்டி வந்தது பாலக்காட்டை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், சூலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர்.