அரசு பொருட்காட்சி வாயிலாக ஒரு மாதத்தில் ரூ.23.25 லட்சம்
கோவை; அரசுப் பொருட்காட்சி வாயிலாக அரசுக்கு 23.25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:கோவை வ.உ.சி., மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், பொருட்காட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும். அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த 1ம் தேதி வரை, 1,65,216 பேர் பார்வையிட்டுள்ளனர்.இதன் வாயிலாக அரசுக்கு 23,25,755 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.