உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார வளாகங்கள் கட்ட ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு

சுகாதார வளாகங்கள் கட்ட ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு

அன்னுார்; ஐந்து சுகாதார வளாகங்கள் கட்ட, 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், பசூர் மகளிர் சுய உதவி குழு கட்டிடம், காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மைய வளாகம், பச்சாபாளையம் ஊராட்சி அலுவலக வளாகம், வடக்கலூர் ஊராட்சி அலுவலக வளாகம், வடக்கலூர் சமுதாய நலக்கூட வளாகம் என ஐந்து இடங்களில், தலா நான்கு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வீதம், 24 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.'இதையடுத்து பணி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் சுகாதார வளாகங்கள் கட்டும் பணி துவங்கும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை