உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சிக்கியது ரூ.3.62 லட்சம்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சிக்கியது ரூ.3.62 லட்சம்

போத்தனுார் : கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில், நான்கு பேர் குழு அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டது. அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குமார், அலுவலக உதவியாளர் ரோஸ்லின் மற்றும் அலுவலக பெட்டியில் வைத்திருந்த 3.62 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ