உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரங்கநாதர் கோவிலில் ரூ.50 லட்சம் காணிக்கை

அரங்கநாதர் கோவிலில் ரூ.50 லட்சம் காணிக்கை

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. கோவை ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் இந்திரா தலைமையிலும், காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி முன்னிலையிலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. இதில் நூற்றுக்கு மேற்பட்ட தன்னார்வாலர்கள், கல்லூரி மாணவர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 11 உண்டியல்களில், பக்தர்கள், 50 லட்சத்து, 22 ஆயிரத்து, 367 ரூபாய் செலுத்தி இருந்தது தெரியவந்தது. மேலும், 114 கிராமம் தங்கமும், 380 கிராம் வெள்ளியும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ