சுல்தான்பேட்டையில் ரூ. 52 ஆயிரம் பறிமுதல்
சூலுார்: சுல்தான்பேட்டையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 52 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சூலுார் தொகுதியில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலாளர் உதவி ஆய்வாளர் செல்லப்பா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர், சுல்தான்பேட்டை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இதில், தாராபுரத்தை சேர்ந்த குமணன் என்பவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 52 ஆயிரம் ரூபாயை, கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, சூலுார் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர்.