நவரச நாட்டியாலயா சார்பில் சலங்கை பூஜை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா சார்பில் நடந்த சலங்கை பூஜையில், மாணவியர் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா சார்பில், சலங்கை பூஜை, கந்த மஹாலில் நடைபெற்றது. சென்னை எம்.ஜி.ஆர்., பல்கலை., தமிழ் பேராசிரியர் சதீஸ்குமார், சாந்தி நிகேதன் பள்ளி செயலாளர் மேனகா ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.புஷ்பாஞ்சலி, விநாயகர் கீர்த்தனை, ஜதீஸ்வரம், அலாரிப்பு, காளிகீர்த்தனை, திருச்செந்துார் முருகன் பாடல், பாரதியார் பாடல், மார்கழி திங்கள், தீனகருணாகரனே நடராஜா உள்ளிட்ட பாடல்களுக்கு மாணவியர் நடனமாடி அசத்தினர்.பாடல்களுக்கு ஏற்ப, நடன அசைவுகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். ஆசிரியர் கீதா, நவரச நாட்டியாலயா இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.