உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமராவதி அணையில் துாய்மை பணி

அமராவதி அணையில் துாய்மை பணி

உடுமலை: அமராவதி அணை பகுதியில், தூய்மைப் பணி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நடந்தது. அமராவதி அணை சுற்றுலா மையத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மையங்களின் தூய்மையை வலியுறுத்தும் வகையில், தூய்மைப் பணி நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமை வகித்தார். இதில், அமராவதி அணைப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல், நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாத்தல், குப்பையை முறையாக அகற்றுதல் மற்றும் சுற்றுலா மையங்களில் இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் சங்கத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூர்த்தி, நாகராஜ், சத்யம் பாபு, பிரசாத், யோகானந்த், ராஜேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !