உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் சஷ்டி வழிபாடு

கோவில்களில் சஷ்டி வழிபாடு

கிணத்துக்கடவு- கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில், நேற்று சஷ்டி வழிபாடு நடந்தது.கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோவில்களில், நேற்று சஷ்டி வழிபாடு நடந்தது. இதில், கனக கிரி வேலாயுத சுவாமி கோவிலில், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதே போன்று, கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், முருகக்கடவுளுக்கு நேற்று மாலை, சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. இதில், பல்வேறு வகையான கனி மற்றும் மலர் அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ