உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

பள்ளி முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே எம்.என்.எம்., உயர்நிலைப்பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி அருகே ஜக்கார்பாளையம் எம்.என்.எம்., உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 1974ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு படித்த, 22 மாணவ,மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர்.அதன்படி, மாணவர்கள் ஒருங்கிணைந்து, பள்ளி வளாகத்தில், 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர்.மாணவர்கள், குடும்பத்துடன் பங்கேற்று, நீண் நாட்களுக்கு பின் சந்தித்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டறிந்து பேசிக்கொண்டனர்.பள்ளியில் படித்த போது நடந்த இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டும்; வாழ்வில் சந்தித்த சவால்கள் உள்ளிட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் முருகநாதன் வரவேற்றார். பள்ளி செயலர் கல்யாணசாமி தலைமை வகித்தார்.பள்ளியில் படித்த போது வகுப்பு எடுத்த ஆசிரியர்களை அழைத்து கவுரவப்படுத்தினர். அதில், 90 வயதான ஆசிரியர் வேலுமணி பங்கேற்றார்.படித்த காலத்தில், ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை போன்று, தற்போது, நாங்களும் (முன்னாள் மாணவர்களான மூன்று ஆசிரியர்கள்) எளிமையான முறையில் தான் குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறோம் என பேசியனர். தொடர்ந்து, ஆண்டுதோறும் சந்திப்பு நடத்தி நட்பை தொடர்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை