மேலும் செய்திகள்
நாளை பள்ளிகள் திறப்பு 12 நாள் செயல்பட வாய்ப்பு
19-Jan-2025
- - நமது நிருபர் -'பிப்., முதல் சனிக்கிழமையான இன்று அரசு பள்ளிகள் விடுமுறை,' என, மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து கடந்த, 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. உழவர் திருநாளுக்கு மறுநாள், ஜன., 17ம் தேதி பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்தது; இதற்கு மாற்றாக, ஜன., 25ம் தேதி பள்ளி வேலை நாளாக பின்பற்றப்பட்டது; அந்நாளில், அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின; மறுநாள் (26ம் தேதி) குடியரசு தினம் பள்ளிகள் செயல்பட்டது.கடந்த, 20ம் தேதி முதல் நேற்று (31ம் தேதி) வரை தொடர்ந்து விடுமுறை இன்றி, 12 நாட்கள் பள்ளி செயல்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்., 1ம் தேதி) சனிக்கிழமை அரசு பள்ளிகள் விடுமுறையென அறிவிக்கப்பட்டுள்ளது.'ஏற்கனவே வெளியிடப்பட்ட பள்ளி கல்வித்துறை நாட்காட்டி அட்டவணைப்படி, பிப்., 1 பள்ளிகள் விடுமுறை என்பதால், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,' என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
19-Jan-2025