உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி அளவில் அலகு தேர்வு; மாணவர்களை தயார்படுத்தறாங்க

பள்ளி அளவில் அலகு தேர்வு; மாணவர்களை தயார்படுத்தறாங்க

பொள்ளாச்சி; அரசு மேல்நிலை பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் தயாரித்து, அலகு தேர்வு நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.அன்றைய தினம், ஏதேனும் ஒரு பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேநேரம், சில மேல்நிலை பள்ளிகளை பொறுத்தமட்டில், தலைமையாசிரியர்கள் முயற்சியின் பேரில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் தயாரித்து, பள்ளி அளவில் அலகு தேர்வு நடத்தப்படுகிறது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சி அவசியமாக கருதப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். அந்த பாடங்களில் இருந்து, வினாக்கள் தயாரித்து, மாதந்தோறும் அலகு தேர்வு நடத்தப்படும்.அதன்படி, தற்போது, ஜூன் மாதத்திற்கான அலகு தேர்வு, மூன்று நாட்களாக, காலை மற்றும் மதியம் வேளைகளில் நடத்தப்படுகிறது. இதற்காக, நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து ஆசிரியர்கள் வினாத்தாள் தயாரிக்கின்றனர்.இவ்வாறு, தேர்வு நடத்துவதால், அவர்கள் கவனமாக படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாக்கி கொள்கின்றனர். பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வை எளிதாக எதிர்கொள்வர்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை