உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற பள்ளி மாணவர்கள்

போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற பள்ளி மாணவர்கள்

சூலுார்; அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை, போதை பொருள் தடுப்பு துறை மற்றும் அரசூர் ஊராட்சி சார்பில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அதிகாரிகள் பேசுகையில்,''போதை பொருட்களை பயன்படுத்தினால், மிகப்பெரிய உடல் நலக்கேட்டை உருவாக்கும். உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும். போதைக்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் சீரழிந்து வருவதை பார்த்திருப்பீர்கள். ஒருவர் போதைக்கு அடிமையானால் அந்த குடும்பம் சந்திக்கும் இழப்புகள் ஏராளம். அதனால், கனவிலும் கூட போதைப்பழக்கத்தை நினைத்து விடாதீர்கள்,'' என்றனர். 'போதை பொருட்களை எந்த நேரத்திலும், எந்த வடிவிலும் பயன்படுத்த மாட்டோம்,' என, மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா, மாவட்ட போதை பொருள் தடுப்பு துறை அலுவலர் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ, தலைமையாசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை