உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்கள் இடைநிற்றல் குறைந்தது; பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி 

மாணவர்கள் இடைநிற்றல் குறைந்தது; பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி 

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கடந்த கல்வியாண்டினை ஒப்பிடுகையில், நடப்பாண்டு மாணவர்கள் இடைநிற்றல் குறைந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, 326 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இவர்களில் மாணவர்கள் சிலர், பள்ளியில் சேர்ந்து சில மாதங்கள் கழித்து, குடும்பச் சூழல், வெளியூருக்கு செல்வது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் காட்டி, படிப்பை விட்டு இடைநிற்கின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர், மாணவர்களின் படிப்பை முக்கியமாக கருதாமல் இருப்பதாலும், இடைநிற்றல் தொடர்கிறது. இதற்காகவே, ஒவ் வொரு பள்ளிக்கு உட்பட்ட ஆசிரியர்கள், இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய அறிவுரை அளித்து, மீண்டும் பள்ளியில் சேர வழிவகை செய்கின்றனர். நடப்பாண்டு, ஒவ்வொரு பள்ளியிலும், இடைநிற்றல் சதவீதம் குறைந்துள்ளதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு கல்வியாண்டும், ஆக., மற்றும் மார்ச் மாதம், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை கண்டறியப்படும். அந்த வரிசையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த கல்வியாண்டு கணக்கெ டுப்பில், சராசரியாக, மொத்த மாண வர்களின் எண்ணிக்கையில், 7 சதவீதம் பேர், இடைநிற்றல் இருந்தது. நடப்பு கல்வியாண்டு, 4 சதவீதமாக குறைந்துள்ளது. இடைநின்ற மாணவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !