உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு

பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு

கோவை, மே 17-போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள மைதானத்தில் இன்று பள்ளி, கல்லுாரி வாகனங்களை, மூன்று துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.கோவை மத்தியம், வடக்கு, தெற்கு, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பள்ளி கல்லுாரி கல்வி நிறுவன வாகனங்கள், இன்று காலை 10:00 மணிக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. கோவை கலெக்டர், போலீஸ், போக்குவரத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி